கடுமையான பாதுகாப்பு அழுத்தத்தில், ஹாங்காங்கின் கடைசி ஜனநாயக ஆதரவு குழுவான லீக் ஆஃப் சோஷியல் டெமோகிராட்ஸ் (LSD) கலைப்பு அறிவிப்பு
சீனாவின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தால் உருவான கடுமையான அரசியல் அழுத்தங்களால், ஹாங்காங்கின் கடைசி செயலில் இருந்த ஜனநாயக ஆதரவு அமைப்பான லீக் ஆஃப் சோஷியல் டெமோகிராட்ஸ் (LSD) அமைப்பு கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
2006-ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, 2024 ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் கலைக்கப்படும் மூன்றாவது முக்கிய எதிர்க்கட்சியாகிறது. 2020 ஆம் ஆண்டு சீனாவின் தேசிய பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர், எதிர்ப்பு கருத்துகளுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
LSD தலைவி சான் போயிங், "கடுமையான அரசியல் அழுத்தங்களால், உறுப்பினர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அமைப்பை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது" என்று கூறினார்.
இந்த அமைப்பின் பல முக்கிய உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குழுவின் முன்னாள் தலைவரான லியாங் க்வாக்-ஹங்க் 2021 இல் “47 ஜனநாயகவாதிகள் வழக்கு”யில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.
இந்நிலையில், ஹாங்காங்கில் எந்தவொரு செயல்பாட்டிலும்இனி அதிகாரப்பூர்வ ஜனநாயக எதிர்ப்பான அமைப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.