2023ல் ஃபுகுஷிமா அணு மையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை கடலுக்கு வெளியேற்றியதையடுத்து, சீனா ஜப்பானிலிருந்து கடல் உணவுத் தூக்குமதியைத் தடை செய்தது. தற்போது, நீண்டகால கண்காணிப்பில் பாதிப்பு காணப்படாததால், ஜப்பானின் 47 மாகாணங்களில் 10 மாகாணங்களைத் தவிர, மீதமுள்ள பகுதிகளிலிருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்வதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
ஃபுகுஷிமா மற்றும் டோக்கியோ உள்ளிட்ட 10 மாகாணங்களிலிருந்து இறக்குமதி மீது தடை தொடரும் என சீனா தெரிவித்தது. சீனாவின் புதிய முடிவை ஜப்பான் வரவேற்றது எனவும், மீதமுள்ள தடை செய்யும் மாநிலங்களுக்கும் அனுமதி வழங்க வலியுறுத்தும் எனவும் ஜப்பான் தெரிவித்தது.
இறக்குமதிக்கு முன்பு நிறுவனங்கள் மீண்டும் பதிவு செய்து கடுமையாக கண்காணிக்கப்படும் என்றும் சீனக் குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது.
தலைமை நிர்வாகி ஹாரோல்ட் கோட்ஜின், அமெரிக்காவின் வரி கொள்கைகள் காரணமாக குறுகியகால எதிர்காலம் சரியாக கணிக்க முடியாததாக இருந்தாலும், நீண்டகால வளர்ச்சியில் நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்