கோலா சிலாங்கூரில் தனது வளர்ப்பு மகளை துஷ்பிரயோகம் செய்து, புறக்கணித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியாகிய பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன, சில வீடியோக்கள் சிறுமியின் கைகள் மற்றும் தலையில் ஏற்பட்ட காயங்களைக் காட்டுகின்றன.
சம்பவம் தொடர்பில் காவல்துறைக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து, 54 வயதான பெண் இரவு 8.15 மணிக்கு கைது செய்யப்பட்டதாக கோலா சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அசாஹருதீன் தாஜுடின் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தஞ்சோங் காராங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விசாரணைக்கு உதவுவதற்காக அந்தப் பெண்ணை ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க இன்று உத்தரவு கோரப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த வழக்கு குறித்து தகவல் தெரிந்தவர்கள் கோலா சிலாங்கூர் காவல்துறையை 03-32891222 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள எந்த காவல் நிலையத்தையும் தொடர்பு கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.