தெகிடி, முண்டாசுப்பட்டி படங்களில் எடிட்டராக இருந்த லியோ ஜான் பால், இயக்குநராகும் மார்கன் படத்தில், விஜய் ஆண்டனி நாயகனாக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். புதிய முகம் அஜய் தீஷன், சமுத்திரக்கனி, பிரிகிடா, தீப்ஷிகா, மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஒரு பெண்ணின் மர்ம கொலை வழக்கை விசாரிக்க வரும் போலீசாரின் (விஜய் ஆண்டனி, அஜய் தீஷன்) விசாரணையையும், அதன் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மையையும் சுவாரஸ்யமாக காட்டுகிறது.