Offline
Menu
பெர்சத்துவின் நெகிரி செம்பிலான் பிரிவு முகஹிடின் யாசினுக்கு முழு ஆதரவு.
By Administrator
Published on 07/09/2025 09:00
News

பெர்சத்துவின் நெகிரி செம்பிலான் பிரிவு, கட்சித் தலைவர் முகஹிடின் யாசினுக்கு முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. 16ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு, அவர் கட்சி மற்றும் பெரிகாத்தான் நேஷனலுக்கு தொடர்ந்தும் தலைமை வகிக்க வேண்டும் என மாநிலத் தலைவர் ஹனிபா அபு பக்கர் வலியுறுத்தினார்.2024 பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் முகஹிடின் திசை மற்றும் கொள்கை ரீதியாக நம்பகமான தலைவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் மாநிலம் முழுமையாக ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.முன்னதாக, போர்ட்டிக்சன் பிரிவு, ஹம்சா ஜைனுதீனை தலைவராகவும், ரட்ஸி ஜிடினை நிர்வாக தலைவராகவும் அமைய கோரி தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கிடையே, பெரும்பான்மை பிரிவுகள் மற்றும் இளைஞர் அமைப்பு முகஹிடினுக்கு தொடர்ந்து ஆதரவு உள்ளதெனவும், தலைமை மாற்றக் கோரிக்கை அடிமட்டத்தின் உணர்வைக் பிரதிபலிக்கவில்லை என்றும் கூறினார்கள்.

Comments