முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ராம்லி, ஜூலை 27ஆம் தேதி "ஆயுஹ் மலேசியா" என்ற சமூக நிறுவன தளத்தை தொடங்க உள்ளார். இது அரசியலுக்கு வெளியே சமூக மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் திட்டமிட்ட முன்முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொது நிறுவனங்களுக்கும் நன்கொடை சார்ந்த அமைப்புகளுக்கும் மத்தியில் வித்தியாசமாக, “ஆயுஹ் மலேசியா” லாபத்தை சமூகத்திற்கே திருப்பி வழங்கும் சமூக நிறுவனங்களை உருவாக்கி இணைக்கும் ஒரே தளமாக செயல்படும். மேலும், அவை செயல்பட தேவையான நிபுணத்துவம் மற்றும் நிதி ஆதரவு வழங்கப்படும்.அரசியல் ஸ்திரமின்மையுடன் வாழும் சூழலில், சமூகத்தின் வலிமை நிலையான அமைப்புகளை கட்டியெழுப்ப முடியும் என ரஃபிஸி நம்புகிறார். பிகேஆர் துணைத்தலைவர் பதவியில் தோல்வியடைந்த பின்னர், அவர் அமைச்சர்பதவியிலிருந்து விலகினார்.