இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் நிலநடுக்க ஆய்வு மையத்தின் பாலி கிளை, பாலி தீவுக்கு சுற்றியுள்ள கடல்களில் செவ்வாயிலிருந்து வெள்ளிக்கிழமை வரை 6 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.பாலியின் தெற்கு கடற்கரை பகுதிகளில் மிகப்பெரிய அலைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வேளையில் பலத்த காற்றும் காணப்படும் என்பதால், கடல் பயணங்கள் மற்றும் கடல்சார் பணிகளில் ஈடுபடும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.