இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி பகுதியில் உள்ள பாட்டௌகா மாவட்டத்தில், 61 வயதான விவசாயி லா நோட்டி கடந்த வெள்ளிக்கிழமை தனது மாட்டுக்கு மூட்டையிட்டுவிட்டு வீடு திரும்பாததை அடுத்து, கிராம மக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.அடுத்த நாள், அவரது நிலத்திற்கு அருகே, வெகுவாக குடைந்திருந்த ஒரு பாம்பை கண்டதும் சந்தேகித்து பிடித்து வெட்டினர். அதில் லா நோட்டியின் உடல் முழுவதுமாக உடையுடன் இருந்தது. அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.பாம்பு சுமார் நான்கு முதல் ஐந்து மீட்டர் நீளமுள்ளதென போலீசார் தெரிவித்தனர். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அதே நாளில் இறுதிச் சடங்கு நடந்தது. இந்த கடும் காட்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வர, மக்கள் வருத்தம் மற்றும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.