அமெரிக்க சுகாதார செயலாளர் ராபர்ட் எப். கெனடியின் கொரோனா தடுப்பூசி மாற்றங்களை எதிர்த்து, முன்னணி மருத்துவ அமைப்புகள் மாசசூசெட்ஸில் வழக்குப் பதித்துள்ளன. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி பரிந்துரை செய்ய வேண்டாம் என கெனடி அறிவித்ததை, “அறிவியலற்ற” மற்றும் “அபாயகரமானது” என அவர்கள் கண்டித்துள்ளனர்.தடுப்பூசி திட்டத்தை மீண்டும் நிலைநாட்ட கோரியுள்ள மருத்துவர்கள், பொதுமக்களிடையே நம்பிக்கை பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர். மேலும், கெனடி பழைய ஆலோசனை குழுவை நீக்கி, புதிய பரிந்துரைகளை தன்னிச்சையாக வழங்கியதையும் அவர்கள் சாடியுள்ளனர். இதேவேளை, அமெரிக்கா கடந்த 30 ஆண்டுகளில் மிக மோசமான சிறுமதி பரவலை எதிர்கொண்டும், தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களின் விளைவாக நம்பிக்கை குறைவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.