இஸ்ரேல் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை நோபல் அமைதி பரிசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். இந்த பரிந்துரை கடிதத்தை அவர் நேரிலாக டிரம்பிடம் வழங்கினார். “ஒவ்வொரு நாடிலும், பிராந்தியங்களிலும் அமைதி ஏற்படுத்துகிறார்” என நெதன்யாகு தெரிவித்தார்.முன்னதாகவும் டிரம்புக்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்களால் நோபல் பரிசுக்குப் பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. இருப்பினும், நோர்வேயின் நோபல் குழுவால் புறக்கணிக்கப்படுவதைப் பற்றி அவர் எப்போதும் வெளிப்படையாகத் தெரிவித்துவந்தார்.இந்தியா-பாகிஸ்தான், செர்பியா-கோசோவோ இடையிலான தகராறுகள், எகிப்து-எதியோப்பியா இடையேயான அமைதிக்கான முயற்சிகள் மற்றும் இஸ்ரேல்-அரபு நாடுகளுக்கிடையேயான அபிரகாம் ஒப்பந்தங்களை முன்னெடுத்ததற்காக பாராட்டுக் கேட்டு வந்துள்ளார்.அமைதி தூதராக பதவிக்கு பிரசாரம் செய்த டிரம்ப், உக்ரைன் மற்றும் காசா போர்களை முடிப்பேன் என வாக்குறுதி அளித்திருந்தாலும், அவரது பதவியேற்புக்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகும் அந்தச் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே உள்ளன.