டானாஸ் புயல், தைவானில் 2 பேர் பலி மற்றும் 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்த பின்னர் சீனாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியை நோக்கி முன்னேறுகிறது. 80 கிமீ வேகத்துடன் செல்லும் இந்த புயல், தென் சீனகடலை கடந்து தைஜோ ஊரை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 100க்கும் மேற்பட்ட பயணங்கள் ரத்து செய்யப்படுள்ளன. சீனாவின் சேஜியாங் மாகாணத்தில் 100-250 மிமீ மழை பெய்ய வாய்ப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல், பின்னர் ஜியாங்சி மாகாணத்தை நோக்கி சென்று, அங்கு ஆழ்ந்த மலைகள் மற்றும் மண்டலங்கள் வெள்ள அபாயத்தை அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.