இமாசலபிரதேசத்தில் பருவமழை தீவிரமாக தாக்கி வரும் நிலையில், இதுவரை மழை காரணமாக 78 பேர் உயிரிழந்து, 31 பேர் காணாமல் போயுள்ளனர். மண்டி மாவட்டம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மாயமானவர்களை தேட டிரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் 243 சாலைகள் மூடப்பட்டுள்ளன, இதில் 183 சாலைகள் மண்டி மாவட்டத்தில் மட்டும் உள்ளன. வரும் 10ம் தேதிவரை கனமழைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட சேதம் ₹572 கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது, இது ₹700 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.