ரஷியாவின் போக்குவரத்துத் துறை மந்திரியாக கடந்த மே மாதத்தில் பதவியேற்ற ரோமன் ஸ்டாரோவிட், இதற்கு முன் கர்ஸ்க் பகுதியின் கவர்னராக 5 ஆண்டுகள் பணியாற்றியவர். அண்மையில், ரஷிய அதிபர் புதினின் உத்தரவின்படி அவர் திடீரென பதவிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான காரணம் வெளியிடப்படாத நிலையில், அவருக்குப் பதிலாக ஆண்ட்ரெய் நிகிடின் நியமிக்கப்பட்டார். பதவிநீக்கத்துக்குப் பிறகு சில மணி நேரத்திலேயே, மாஸ்கோ புறநகர் பகுதியில் காரில் இருந்தபடி துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு ரோமன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.