Offline
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் - ஐகோர்ட் உத்தரவு
By Administrator
Published on 07/09/2025 09:00
Entertainment

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணையின் போது இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணை நிறைவு பெற்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளிக்கிறது.

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் 23-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர்.

Comments