நான்கு மாடி கிடங்கில் பல்வேறு பொருட்களை சேமித்து வைத்திருந்த தீ விபத்தில் மூன்று வெளிநாட்டினர் மீட்கப்பட்டனர். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் புதன்கிழமை (ஜூலை 9) அதிகாலை 3.05 மணியளவில் பேரிடர் அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.
மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்து மொத்தம் 16 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். ஒரு இந்திய நாட்டு ஆடவர், மியான்மரைச் சேர்ந்த ஒரு ஆடவர் மற்றும் பெண்ணையும் மீட்டோம் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 4.04 மணிக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக அவர் கூறினார்.