மலேசியர்கள் இலக்கவியல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்ளவும், திறனை மேம்படுத்தவும் இலக்கவியல் அமைச்சு இலவச பயிற்சிகளை வழங்குவதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ தமதறிக்கையில் தெரிவித்தார்.
இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் MyDIGITAL Corporation இந்தப் பெருமுயற்சியை மேற்கொண்டிருக்கின்றது. இலக்கவியல் தொழில்நுட்ப அறிவின் வழி மக்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதோடு, உலகளாவிய நிலையில் போட்டியாற்றல்மிக்கவர்களாகவும் விளங்க முடியும் என தாம் நம்புவதாக கோபிந்த் சிங் கூறினார்.
நாடு இலக்கவியல் தொழில்நுட்பத்தில் முன்னேற முக்கிய அம்சமாக விளங்குவது மக்களுக்கான இலக்கவியல் தொழில்நுட்ப அறிவாகும். இலக்கவியல் செயற்கை நுண்ணறிவு ஒரு சாராருக்கும் மட்டுமே என அல்லாமல்,அனைத்துத் தட்டு மக்களூக்கும் இலக்கவியல் செயற்கை நுண்ணறிவுத் திறனும், அதன் தேவைக்கான விழிப்புணர்வும் இருத்தல் அவசியம்.