ரோம்:இத்தாலியின் மிலன் நகரில் பெர்கமோ விமான நிலையம் அமைந்துள்ளது. இன்று காலை இந்த விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
வோலோடியா விமான நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-319 என்ற விமானம் ஸ்பெயினின் அஸ்டூரியாஸ் செல்ல விமான ஓடுதளத்தில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது அதனருகே ஓடிக்கொண்டிருந்த நபர் விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டார் என தெரிவித்துள்ளது.