முறையற்ற குற்றச்சாட்டுகள் என கூறிய துணை மந்திரி டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி, கிளந்தான் மாநிலம் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுவதாக பாஸ் தலைவர்கள் கூறுவது உண்மையல்ல என்றும் மறுத்தார்.
அண்மையில் நிலச்சரிவுக்காக ரூம்6.6 மில்லியன் அவசர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதையும், வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களில் மத்திய அரசு தொடர்ந்து உதவி செய்ததையும் அவர் எடுத்துக்காட்டினார்.“பொய்யான தகவல்களை மக்களிடத்தில் பரப்ப வேண்டாம். உண்மையான தகவல்களை கட்சி தலைமையிலிருந்து பெற வேண்டும்” எனவும் சாஹிட் கேட்டுக்கொண்டார்.பாஸ் துணைத்தலைவர் மொஹ்த் அமார் நிக் அப்துல்லா, கிளந்தான் மட்டுமே நெடுஞ்சாலையில்லாத மாநிலமாக உள்ளதாகவும், பல திட்டங்கள் யாதொரு விளக்கமும் இல்லாமல் தாமதப்படுத்தப்பட்டதாகவும் முன்னதாக குற்றம் சாட்டியிருந்தார்.