வழிகாட்டி மற்றும் நியாயம் மேம்பட ஆசியான்-துருக்கி ஒருமித்த குரலுடன் செயல்பட வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் முகமட் ஹசன் வலியுறுத்தினார். காசா நிலைமை உள்ளிட்ட உலக நெருக்கடிகளில் சர்வதேச சட்டங்களை மீறும் இஸ்ரேலுக்கு எதிராக தெளிவான கண்டனம் தேவை என கூறினார்.அதேசமயம், பாதுகாப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் ஆசியான்-துருக்கி கூட்டுறவு வலுப்பெறுவதாகவும், மக்கள் இடையேயான தொடர்பை மேம்படுத்த கல்வி, பயிற்சி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.