மலேசிய விமான நிலையங்கள் ஹோல்டிங்ஸ் பெருந்திறையம் (MAHB) பங்கு விற்பனை மற்றும் தனியார்மயமாக்கல் விவகாரத்தில் மேலதிக விளக்கங்கள் பெறும் நோக்கில், பொதுக்கணக்கு குழு (PAC) முன்னாள் சுயாதீன இயக்குநரையும், பிற சாட்சிகளையும் மீண்டும் விசாரணைக்கு அழைக்க தீர்மானித்துள்ளது. இதற்கான முடிவு முந்தைய நடைமுறைகளின் உரைமொழிகளை ஆய்வு செய்த பிறகு எடுக்கப்பட்டது என PAC தலைவி மாஸ் எர்மியாத்தி சம்சுதின் தெரிவித்துள்ளார். இதுவரை 16 நடைமுறைகள் நடைபெற்றுள்ளன என்றும், இது தொடரும் என்றும் கூறினார்.PAC உறுப்பினர்கள் தெரசா கோக் மற்றும் சிம் ஜி சின் வெளியிட்ட கருத்துகள் குழுவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். விசாரணை முடிவடைந்ததும் முழுமையான அறிக்கை தயாரித்து அரசு மற்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.