மாராங்: பாஸ் தலைமை பதவியில் தொடரும் என டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் உறுதிப்படுத்தியுள்ளார். 20 ஆண்டுகளாக தலைவர் பொறுப்பில் இருக்கும் அவர், செப்டம்பரில் கெடாவில் நடைபெறும் முக்தாமிலும் பதவியை தக்கவைத்துக் கொள்ள இருப்பதாக தெரிவித்தார். உடல்நிலை நலமாக உள்ளதால், வாழ்நாள் முழுவதும் கட்சிக்கு சேவை செய்ய விருப்பம் உள்ளதாகவும், முடிந்தால் சேவை செய்யச் செய்ய இறக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். பெரிகாத்தான் நேஷனல் தலைவர் பதவி குறித்து, அது கூட்டணிக் கட்சிகள் மத்தியிலும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்றும் ஹாடி தெரிவித்தார்.