Offline
Menu
காதலர்களால் ஏமாற்றப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 14 வெளிநாட்டு பெண்கள் மீட்பு குடிநுழைவுத் துறை நடவடிக்கை.
By Administrator
Published on 07/12/2025 09:00
News

கோலாலம்பூர் ஜாலான் பெட்டாலிங்கில் உள்ள ஒரு விபச்சார விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில், காதலர்களால் ஏமாற்றப்பட்டு பாலியல் சுரண்டலுக்கு தள்ளப்பட்ட 14 வெளிநாட்டு பெண்கள் குடிநுழைவுத் துறையினரால் மீட்கப்பட்டனர். இவர்கள் 18 முதல் 36 வயதுடையவர்கள் ஆகும்.உளவுத்தகவலின் அடிப்படையில் நடைபெற்ற இந்தச் சோதனையில், சம்பந்தப்பட்ட வளாகத்தை இயக்கியதாக சந்தேகிக்கப்படும் மூன்று உள்ளூர் ஆடவர்கள் ATIPSOM சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.வாடிக்கையாளர்கள் நேரில் வந்து சுமார் RM60 கொடுத்து இந்த சேவைகளைப் பெற்றதாகவும், சோதனையின் போது 16 ஆண் வாடிக்கையாளர்கள் இருப்பதும் தெரியவந்தது. இந்த நடவடிக்கை மனிதக் கடத்தலுக்கு எதிரான தேசிய வழிகாட்டுதல்களை பின்பற்றியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments