தமிழ் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் மற்றும் சங்க பொறுப்பாளர்கள், இந்திய சமுதாயத்தின் மொழி, இன, சமய வளர்ச்சிக்காக சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பினாங்கு மாநில மலேசிய இந்து சங்கத் தலைவர் தர்மன் ஆனந்தன் தெரிவித்தார்.நிபோங் தெபால் வட்டாரப் பேரவையின் சமயப் பிரிவு நடத்திய அன்னையர் – தந்தையர் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சமுதாய ஒற்றுமை மற்றும் ஆன்மிக ஒளியுடன் கூடிய தலைமுறையை உருவாக்க சமயக் கல்வியும் சமூக சேவையின் மதிப்பையும் இளம் தலைமுறைக்கு எடுத்துரைப்பதும் முக்கியம் என வலியுறுத்தினார்.விழாவில் மாநில சமயப் பிரிவுத் தலைவர் பி. பூங்கொடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய சமயப் பிரிவு தலைவர் செல்வி துரைசாமி மற்றும் அவரது குழுவினருக்கும், பெற்றோர், தன்னார்வலர்களுக்கும் தர்மன் ஆனந்தன் நன்றியை தெரிவித்தார்.மேலும், கலிடொனியா தோட்டத்தில் உள்ள ஸ்ரீ அன்னை மகா முத்து மாரியம்மன் கோயில் நிர்வாகத்தின் ஒத்துழைப்புக்கும் நன்றியுரை தெரிவிக்கப்பட்டது.