2025 மே மாதத்தில் மலேசியாவின் வேலையில்லாதோர் எண்ணிக்கை 0.7% குறைந்தது. ஏப்ரலில் 525,900 பேராக இருந்தது மே மாதம் 522,400 ஆக குறைந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து 3% நிலவரத்தில் இருந்த வேலையில்லாதோர் வீதம், ஆக்கப்பூர்வ பொருளாதார செயல்கள் மற்றும் வேலை வாய்ப்பு அதிகரிப்பால் குறைந்துள்ளது. மே மாதத்தில் வேலைவாய்ப்புள்ளோர் எண்ணிக்கை 0.3% அதிகரித்து 16.86 மில்லியனாக உயர்ந்துள்ளது. உற்பத்தி, நிர்மாணம், விவசாயம், சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.