கோலாலம்பூர்,
நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று புத்ரஜெயாவில் மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டத்தின் 146வது அமர்வை தலைமையிட்டு நடத்தினார்.
தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பதிவில், இந்தக் கூட்டம் கூட்டாட்சி நிர்வாகத்திற்கும், தேசிய வளர்ச்சி நடவடிக்கைகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கியமான மேடையாக செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
“இத்தகைய ஒத்துழைப்பு மூலம், மக்களின் நலனுக்கும், நாட்டின் மொத்த முன்னேற்றத்திற்கும் தேவையான முழுமையான மற்றும் உள்ளடக்கிய தேசிய வளர்ச்சி திட்டங்களை சீராக செயல்படுத்த முடியும்” என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமர்வில் சட்ட மற்றும் நிறுவன மறுசீரமைப்பு தொடர்பான பிரதமரின் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சையத், மத விவகார அமைச்சர் டத்தோ டாக்டர் மொஹமட் நைம் மொக்தார், டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் பல முக்கிய பொறுப்பிலுள்ளவர்களும் பங்கேற்றனர்.