ஜோகூர் பாரு,
ஜோகூர் போலீசார் மேற்கொண்ட சிறப்பு சோதனையில் RM3.55 மில்லியனை எட்டும் பல்வகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவவத்துடன் தொடர்புடைய, ஒரு உள்ளூர் ஆண் மற்றும் இரு வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் வியாபாரிகள், பாதுகாப்புடன் கூடிய வீடுகளில் போதைப்பொருட்களை பதுக்கி, சந்தையில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர். சோதனை ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் தெரிவித்ததாவது,
மொத்தமாக, 20.7 கிலோ ecstasy தூள், 18.49 கிலோ கஞ்சா, 154.25 கிராம் ketamine, 141 கிராம் erimin 5 மாத்திரைகள் மற்றும் தயாரிப்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தை மதிப்பில் மட்டும் கஞ்சா பூக்கள் ஒரு கிலோக்கு RM36,000 ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட மூவரும் methamphetamine போதைப்பொருள் சோதனையில் அவர்கள் பாவனையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், இவர்கள் மீது 1952 ஆம் ஆண்டின் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் (விதி 39B) மற்றும் குடியேற்றச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.