Offline
பதவியை துஷ்பிரயோகம் செய்ததன் தொடர்பில் அரசு ஊழியர் கைது
By Administrator
Published on 07/15/2025 09:00
News

கோல திரெங்கானு, மாநிலத்தில் பல அரசாங்க நில விண்ணப்பங்கள் தொடர்பாக தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தெரெங்கானு மாநில அரசு ஊழியர் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை வரை காவலில் வைக்க நீதிபதி இஃபா நபிஹா முகமது இஷாக் உத்தரவிட்டார். ஒரு வட்டாரத்தின்படி, 50 வயதுடைய சந்தேக நபரான ஆடவர், நேற்று பிற்பகல் 2 மணியளவில் MACC திரெங்கானு அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் 2019 மற்றும் 2023 க்கு இடையில் நிலத் திட்டங்களை கையாண்டது  தனது குழந்தைகளின் நலனுக்காக மாநிலத்தில் பல்வேறு நிலம் தொடர்பான செயல்முறைகளை கையாண்டது உள்ளிட்ட குற்றங்களைச் செய்ததாக நம்பப்படுகிறது என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை நோக்கங்களுக்காக, MACC திரெங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் சுமார் 9,000 மற்றும் 6,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இரண்டு நிலங்களை கைப்பற்றியுள்ளதாக அந்த வட்டாரம் மேலும் கூறியது.

Comments