சென்னை,”மிஸஸ் அண்ட் மிஸ்டர்” படத்தில் இடம் பெற்றுள்ள இளையராஜாவின் பாடலை சோனி நிறுவத்திடம் அனுமதி பெற்றுதான் பயன்படுத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
“மிஸஸ் அண்ட் மிஸ்டர்”படத்தில் இளையராஜா இசையில் உருவான மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தின் “ராத்திரி சிவ ராத்திரி” பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலுக்கான உரிமையை பணம் கொடுத்து சோனி நிறுவனத்திடம் வாங்கியதாக நடிகை வனிதா கூறியுள்ளார்.
மேலும், இளையராஜா வழக்கு போட வேண்டும் என்றால், அந்த நிறுவனத்தின் மீதுதான் போட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.