Offline
நடிகை சரோஜா தேவி காலமானார்
By Administrator
Published on 07/15/2025 09:00
Entertainment

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.

தனது 50 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையில்தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். சரோஜா தேவி மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட அடைமொழிகளால் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் சரோஜாதேவி. 

அவர் எம்.ஜி.ஆருடன் 26 திரைப்படங்கள் மற்றும் சிவாஜியுடன் 22 திரைப்படங்கள் நடித்துள்ளார்.

பாலும் பழமும், பாசம், ஆலயமணி, கல்யாணியின் கனவன், தாய் சொல்லை தட்டாதே, தர்மம் தலைகாக்கும் என்ற திரைப்படங்கள் மிக பிரபலமானவை.

அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments