இன்றைய சினிமாவில் படம் எடுப்பது தான் பெரிய சவாலை. தொழில்நுட்பம் வளர்ந்ததாலும், மக்கள் எதிர்பார்ப்பு அதிகமானதாலும், குறைந்த பட்ஜெட்டில் ஹிட் கொடுப்பது கடினம். ஆனால், நல்ல கதைதான் படத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.அந்த வகையில், சில மாதங்களுக்கு முன் வெளியான Tourist Family படம், வெறும் 7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 1300% லாபம் ஈட்டியுள்ளது. இது 2025-இல் இந்தியாவில் அதிக லாபம் கொடுத்த திரைப்படமாகும்.சசிகுமார், சிம்ரன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம், இலங்கை அகதிகளை மையமாகக் கொண்டு எதார்த்தமான கதையுடன் எடுத்துச் செல்லப்படுகிறது. பாடல்களும் பிம்பங்களும் இல்லாமல், நேர்த்தியான கதையாடலால் மக்களின் மனதில் இடம் பெற்றது. குறைந்த செலவில் பெரிய வெற்றி பெற்றதற்கான காரணம் அழுத்தமான கதைதான்.