1983-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம், வரலாற்றில் சிறப்பான இடம் பெற்றது. ஊர்வசி, கோவை சரளா நடித்த இந்த rural love storyக்கு ஆரம்பத்தில் கங்கை அமரனே இசையமைக்கப் போவதாகக் கூறப்பட்டு, போஸ்டர்களிலும் அவரது பெயர் இடம் பெற்றது.ஆனால், தயாரிப்பு நிறுவனம் ஏ.வி.எம்., கிராமப்புறப் பின்னணிக்கு இளையராஜாவின் இசை பொருத்தமாக இருக்கும் என்றும், வியாபார ரீதியாக சிறந்த தேர்வாக இருக்கும் என்றும் பரிந்துரைத்தது. இதையடுத்து, பாக்யராஜ் முதலில் மறுத்தாலும், இறுதியில் இசையை இளையராஜா தான் அமைக்க அவர் சம்மதிக்கிறார்.இதற்குள் போஸ்டர்களில் கங்கை அமரனின் பெயர் வெளியானதால், அவர் வாய்ப்பை பறித்ததாகத் தோன்றாதிருக்க, “இசை: இளையராஜா, பாடல்கள்: கங்கை அமரன்” என பிரித்து காண்பிக்க வேண்டும் என ஒரு நிபந்தனை வைக்கப்பட்டது. இதை ஏற்று, இசைச் சிக்கலைத் தாண்டி படம் வெளியானது.இறுதியில், இசையும், கதையும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த உண்மையை, கங்கை அமரனே ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.