ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் மங்கிலம்பள்ளி வெங்கடேஷ், ரசிகர்களிடம் "ஃபிஷ் வெங்கட்" என அறியப்படும் அவர், சிறுநீரக குறைபாடுகளால் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 53.பல வருடங்களாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில், அவரது குடும்பம் மருத்துவ செலவுகளுக்காக சினிமா உலகம் மற்றும் பொதுமக்களிடம் உதவி கோரியது.முசீராபாத்தைச் சேர்ந்த வெங்கட், முதலில் மீன் விற்பனையாளராக இருந்தார். பின்னர், நடிகர் ஸ்ரீஹரியுடன் ஏற்பட்ட நட்பு மூலம், இயக்குனர் வி.வி. வினாயக்கை சந்தித்து 2002ஆம் ஆண்டு ‘ஆதி’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் உடன் முதன்முறையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அதையடுத்து, "தில்", "பன்னி", "DJ உள்ளிட்ட சுமார் 90 படங்களில் சிறப்பான துணை வேடங்களில் நடித்தவர். தெலுங்கு பிராந்திய நுணுக்கத்தோடும், நகைச்சுவையோடும் கலந்த அவரது நடிப்பு, ரசிகர்களிடையே தனி இடத்தைப் பெற்றது.பெருமை கூறும் போக்கின்றி எளிமையாக வாழ்ந்த அவரின் மரணம், திரை உலகத்தையும் ரசிகர்களையும் இரங்கச்செய்துள்ளது. பலர் அவருடைய சாதனைகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.ஃபிஷ் வெங்கட் மீன் சந்தையிலிருந்து திரைப்பட உலகம் வரை தன் கனவுகளை நனவாக்கிய, தன்னிகரற்ற கலைஞராக நினைவுகொள்ளப்படுவார்.