Offline

LATEST NEWS

நிர்வாண படங்கள், வீடியோக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவருக்கு அபராதம்
By Administrator
Published on 07/21/2025 09:00
News

கோத்தா பாரு,

இரு மாணவர்கல் உள்ளிட்ட மூவர் தங்களது கைப்பேசிகளில் நிர்வாண படங்களும் வீடியோக்களும் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இன்று மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பொது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களுக்கு தலா RM3,000 முதல் RM4,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

22 வயதான முகமட் அல் அசாமுத்தீன் மற்றும் 27 வயதான முகமட் ஷய்மி ஆகியோர் தலா RM4,000 அபராதம் செலுத்தவும் , 47 வயதான மொக்ட் ஹனாபி RM3,000 அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூன் 18 ஆம் தேதி அதிகாலை 1.15 மணியளவில், பாஞ்சோரில் உள்ள ஜாலான் கெமுமின், கம்போங் புலாவ் பெலகான் எனும் வீடொன்றில் தங்களது கைபேசிகளில் நிர்வாண உள்ளடக்கங்களை வைத்திருந்ததாக இவர்கள் மீது புகார் தாக்கல் செய்யப்பட்டது.

இச்சம்பவம் குற்றச் சட்டம் பிரிவு 292ன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இது ஒரு மூன்று வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படக்கூடியது.

அரசு தரப்பில் துணை பொதுமக்கள் வழக்கறிஞர்கள் முகமட் நத்சிர் அப்துல்லா மற்றும் நூர் ஹசிகா ஹசன் ஆகியோர் தோன்றினர். மூவரும் சட்டத்தரணி சாங் யின் ஸின் வழியாக நியாயமான தண்டனை வழங்கக்கோரினர்.

அரசு தரப்பில், குற்றவாளிகளின் செயல்கள் சமூக ஒழுங்கு மற்றும் அற நெறிகளை மீறியவை என்பதால், மக்களுக்கு ஒரு பாடமாக கற்பிக்கும் விதத்தில் தண்டனை வழங்க கோரப்பட்டது.

முக்கியமாக, குற்றவாளிகள் தங்கள் தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதுடன், குறைந்தபட்ச அபராதம் வழங்க வேண்டும் என சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார். மொக்ட் ஹனாபிக்கு 2016 இல் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது உடல் நலக்குறைவுடன் உள்ளார் என்றும், அவரது சகோதரி மாற்றுத்திறனாளியாக உணவகத்தில் பணியாற்றி அவரை பின்தங்குகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Comments