மோகன்லால் நடிப்பில் அண்மையில் வெளியான தொடரும் திரைப்படம் 200 கோடி வசூலை கடந்து மாபெரும் வெற்றியை பெற்றது. அந்த படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் வர்மா தான் இந்த விளம்பர வீடியோவை இயக்கியுள்ளார் .
விளம்பர வீடியோவில், படப்பிடிப்பு தளத்திற்கு வரும் மோகன்லாலை பிரகாஷ் வர்மா அழைத்துச் சென்று மாடல் அழகியிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். அப்போது மாடல் அழகி அணிந்திருக்கும் வைர நெக்லஸ், மோதிரம், பிரேஸ்லட் மீது மோகன்லாலுக்கு ஆசை ஏற்படுகிறது.
மாடல் அழகி நகைகளை கழற்றி வைத்த பிறகு மோகன்லால் அவற்றை அணிந்து கொண்டு கண்ணாடி முன் நின்று தன்னை தானே மெய் மறந்து ரசிப்பது போன்றும் காட்சி அமைந்துள்ளது.
இந்த விளம்பர வீடியோவில் பெண்மை தன்மையுடன் கூடிய மோகன்லாலின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.