Offline
Menu
மீண்டும் மீண்டுமா?- கார் விபத்தில் சிக்கிய அஜித்அஜித் குமார் தற்பொழுது குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்று வரும் GT4 யூரோபியன் சீரிஸ் கார் ரேஸில் பங்கேற்று
By Administrator
Published on 07/21/2025 09:00
Entertainment

அஜித் குமார் தற்பொழுது குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்று வரும் GT4 யூரோபியன் சீரிஸ் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் ரேஸில் ஈடுப்பட்ட அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக காயமின்றி அவர் தப்பினார்.

வளைவில் வேகமாக திரும்பும்போது, சர்க்யூட்டின் நடுவில் பழுதாகி நின்றுகொண்டிருந்த கார் மீது அஜித்தின் கார் மோதியது. கார் மீது மோதாமல் இருக்க எவ்வளவோ முயன்றபோதும் கட்டுப்படுத்த முடியவில்லை.

சர்க்யூட்டில் சிதறிக் கிடந்த கார் பாகங்களை அகற்றிக் கொண்டிருந்த ஊழியர்களுடன் இணைந்து அஜித்குமாரும் இணைந்து வேகமாக பாகங்களை அப்புறப்படுத்தினார். விபத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 64 படத்தில் நடிக்க இருக்கிறார்.

Comments