சபா: RM3.9 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோதப் பொருட்கள் பறிமுதல்
புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை (JKDNKA), கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சபா மாநிலம் லாஹாட் டத்து மற்றும் தவாவ் ஆகிய இரு பகுதிகளில் நடத்திய அதிரடி நடவடிக்கைகளில் RM3.9 மில்லியன் மதிப்புள்ள பல்வேறு சட்டவிரோதப் பொருட்களைப் பறிமுதல் செய்தது.
லாஹாட் டத்துவில், RM645,890 மதிப்புள்ள 30,000 லிட்டர் கச்சா பாமாயில் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
தவாவ்வில், RM3.2 மில்லியன் மதிப்புள்ள 622 சண்டைச் சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இதில் இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டவர்களும் அடங்குவர். கைது செய்யப்பட்டவர்கள் விலங்கு நலச் சட்டம், குடிவரவுச் சட்டம் மற்றும் அபாயகரமான ஆயுதங்கள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.