Offline
Menu

LATEST NEWS

KB-தாய் எல்லை வரை ECRL நீட்டிப்பு பரிசீலனை – கிளந்தான் துணை முதல்வர்
By Administrator
Published on 07/22/2025 09:00
News

KB-ரந்தாவ் பாஞ்சாங் வழியாக ECRL நீட்டிப்பு பரிசீலனையில் – கிளந்தான் துணை முதல்வர்

கோத்தா பாருவிலிருந்து பாசிர் மாஸ், ரந்தாவ் பாஞ்சாங் வரை ECRL ரயில்வே திட்டத்தை நீட்டிக்க வழிவகுக்கும் முன்மொழிவு தற்போதும் போக்குவரத்து அமைச்சும் Malaysia Rail Link நிறுவனமும் ஆய்வு செய்து வருகின்றன.

கிளந்தான் துணை முதல்வர் டத்தோ டாக்டர் முகமட் ஃபட்ஸ்லி ஹசன் கூறியதாவது, மலேசியா–தாய்லாந்து இடையிலான பழைய ரயில்வே இணைப்பை மீண்டும் செயல்படுத்தும் அரசுகள் இணக்கப்பாட்டின் பின்னணியில் இந்த நீட்டிப்பு தேவையானதாக பார்க்கப்படுகிறது.

புதிய திட்டம், பழைய தும்பாட் வழியைவிட பாசிர் மாஸ்-ரந்தாவ் பாஞ்சாங் வழியாக செல்லும் வகையில் இருக்கும் எனக் கிளந்தான் அரசு பரிந்துரை செய்துள்ளது.

மேலும், பாசிர் புடேவில் Cargo Oriented Development (COD) திட்டம் மற்றும் துன்ஜோங் நிலையத்தில் Transit Oriented Development (TOD) திட்டம் ஊடாக மாநிலத்தின் பொருளாதாரம் வளர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ECRL திட்டம் 2026 இறுதிக்குள் முடிந்து, கோத்தா பாரு–கொம்பாக் பாதை 2027 ஜனவரியில் இயக்கத் தொடங்கும். கொம்பாக்–போர்ட் கிளாங் பாதை 2028ல் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments