அமெரிக்க தூதராக நிக் ஆடம்ஸ் நியமனம் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது – டோக் மாட்
அமெரிக்கா நிக் ஆடம்ஸை மலேசிய தூதராக நியமிக்கப்போகிறதென்ற தகவல்களுக்கு பதிலளித்த வெளிநாட்டியல் அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹாசன் (டோக் மாட்) கூறியதாவது:
“ விஸ்ம புத்ரா இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ கோரிக்கையும் பெறவில்லை. இது வெறும் கேள்விப்பட்டதுதான். இப்போது எதையாவது நிராகரிப்பது மலேசியாவுக்கு வம்பாகிவிடும்.”
அதனால், அமைச்சரவை ஆலோசனைக்கு முன் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும், தேவையில்லாமல் நம்மையே கலங்கடிக்க வேண்டாம் என்றும் அவர் விளக்கினார்.
இதற்கிடையில், கடந்த வாரம் பிரதமர் அன்வார் கூறியதாவது: அமெரிக்க தூதர் நியமனத்தில் மலேசியா வழக்கமான தூதர்துறை நடைமுறைகளைப் பின்பற்றும்.