காஸாவில் உணவு உதவி பெறும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு: 93 பேர் பலி
காஸாவில் மனிதாபிமான உதவி பெறும் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியப் படைகள் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 93 பேர் கொல்லப்பட்டனர். கஸ்ஸா சிட்டியில் 80 பேரும், ரஃபா அருகே 9 பேரும் கொல்லப்பட்டனர். ஐ.நா. உலக உணவுத் திட்டம் (WFP) இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளது.
இஸ்ரேல் படைகள் உயிரிழப்பை மறுத்து, "அச்சுறுத்தலை நீக்க" துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறியது. இருப்பினும், உணவுப் பற்றாக்குறையால் மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் கொல்லப்படுவது கஸ்ஸாவில் தொடர்கிறது.
அக்டோபர் 7, 2023 ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு போர் தொடங்கியது. இதில் 1,219 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் பதிலடித் தாக்குதல்களில் இதுவரை 58,895 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.