இந்தோனேசியாவின் சுலாவேசி தீவு அருகே KM Barcelona 5 படகில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர், மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டனர். பலர் பெரிய தீயிலிருந்து தப்பிக்க கடலில் குதித்துள்ளனர்.
வடக்கு சுலாவேசியின் மனாடோ நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது படகின் பின்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்களில் இருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கடலோரக் காவல்படை மற்றும் மீனவர்கள் உட்பட பலர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்தோனேசியாவில் கடல் விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன, இதற்கு பாதுகாப்பு தரநிலைகளில் உள்ள குறைபாடுகள் அல்லது மோசமான வானிலை காரணமாகக் கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு பாலி தீவு அருகே ஒரு படகு மூழ்கியதில் 19 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.