விக்னேஷ் சிவன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், நயன்தாரா தனது தயாரிப்பில் அவரை லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கச் செய்தார். பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படம் செப்டம்பர் 18 (விக்னேஷ் சிவன் பிறந்தநாள்) அன்று வெளியிட திட்டமிடப்பட்டது.
ஆனால் படப்பிடிப்பு மற்றும் பின்னணி வேலைகள் முடியாததால் படம் தாமதமாகி, பிப்ரவரி 14 காதலர் தினத்திற்கு மாற்றியுள்ளனர். இதனால் நயன்தாரா கடும் கோபத்திலும், படத்தின் எதிர்காலம் குறித்து பதட்டத்திலும் இருக்கிறாராம். போட்டியில்லாமல் வெளியாக வேண்டிய படம், இப்போது கடும் போட்டி நாளில் நுழைவது காரணம் என கூறப்படுகிறது.