ஜெயம் ரவி, ஹேட்டர்ஸ் இல்லாத நடிகராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். ‘காதலிக்க நேரமில்லை’ படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதுடன், தற்போது அவர் நடித்துள்ள ‘கராத்தே பாபு’, ‘பராசக்தி’, ‘ஜினி’, ‘தனி ஒருவன் 2’ ஆகியவை வெளியாகவிருக்கின்றன.
படப்பிடிப்புகள் மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் பிஸியாக இருக்கும் ஜெயம் ரவி, சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் இலங்கை சென்றுள்ளார். சுற்றுலா பயணம் இல்லாமல், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித் ஹெராத்தை சந்தித்து பேசினர்.
கெனிஷாவின் இசை நிகழ்ச்சி இலங்கையில் நடத்துவது தொடர்பான ஆலோசனைகளே இந்தச் சந்திப்பின் முக்கிய காரணம் என கூறப்படுகிறது