பந்தான் எம்.பி ரபீசி ராம்லி, அரசும் நீதித்துறையும் குறித்த தனது விமர்சனங்களை பாதுகாத்து, "நண்பரை கண்டிப்பதே உண்மையான தலைமையின் சோதனை" என தெரிவித்தார்.
அவர், பிரதமர் அன்வர் தலைமையிலான அரசாங்கத்தில் தன் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டதால் அமைச்சரவை பதவியை ராஜிநாமா செய்ததாகவும், நீதிமன்ற நியமன முறையை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.