கெபோங்கில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு தொழிற்சாலை மீது இமிக்ரேஷன் துறை சோதனை நடத்தி, இருவர் கைது செய்யப்பட்டனர்.
பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கான நூற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட் மற்றும் ஃபோமேம் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாஸ்போர்ட் ஒன்றுக்கு RM400 வசூலிக்கப்பட்டு, நாள் ஒன்றில் 20-30 வரை தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வாட்ஸ்அப்பில்டர் பெற்று, பணம் பங்களாதேஷ் கணக்கில் செலுத்தப்பட்டதென விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரும் குடிவரவு சட்டம் பிரிவு 55D-ன் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.