பண்டார் உத்தாமா அருகே ஒரு கட்டுமான தளத்தில், 30 வயது மதிக்கத்தக்க மியான்மார் குடியுரிமையாளர் ஒருவர் வயிறு மற்றும் கழுத்துக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
கோலா முடா போலீஸ் தலைவர் ஏசிபி ஹன்யான் ரம்லான் கூற்றுப்படி, ஆரம்பக்கட்ட விசாரணையில் சந்தேகநபரான 50 வயதுடைய மற்றொரு மியான்மார் குடியுரிமையாளருக்கும், இறந்தவருக்கும் இடையே சண்டை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் குற்றவியல் சட்டம் பிரிவு 302 கீழ் விசாரணை நடைபெறுகிறது. அத்துடன், கட்டுமான தளத்தில் பணியாற்றியவர்களுக்கு சரியான ஆவணங்கள் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.