டிரம்ப் நிர்வாகம், அமெரிக்க சிவில் உரிமை இயக்கத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் கொலை தொடர்பான நூற்றுக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டது, தேசிய புலனாய்வு இயக்கத்தின் தலைவர் டல்சி காபர்ட், அமெரிக்க மக்கள் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இந்த விவரங்களுக்காகக் காத்திருந்ததாகக் கூறினார்.
2.3 லட்சம் பக்க ஆவணங்கள் வெளியிடப்பட்டது, அரசின் வெளிப்படைத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார். டிரம்ப் ஜான் எஃப். கென்னடி, ராபர்ட் கென்னடி மற்றும் கிங் கொலை வழக்குகளுக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட உத்தரவிட்டிருந்தார்.
1968 ஏப்ரலில் கொல்லப்பட்ட கிங் வழக்கில், ஜேம்ஸ் எர்ல் ரே குற்றவாளியாகக் கூறப்பட்டாலும், கிங் குடும்பம் அதைத் தொடர்ந்து கேள்வி எழுப்பியது. FBI இயக்குனர் ஜே. எட்கார் ஹூவர் தலைமையில் கிங் மீது வதந்தி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவரது பிள்ளைகள் கவலை தெரிவித்தனர்.