வட பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர்; 15க்கும் மேற்பட்டோர் காணவில்லை என அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். கில்ஜித்-பால்டிஸ்தான், தியாமர் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன. மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
ஜூன் மாத இறுதியில் பருவமழை தொடங்கியதிலிருந்து, திடீர் வெள்ளம் மற்றும் பிற சம்பவங்களில் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வெள்ளத்தால் 50 வீடுகள், நான்கு பாலங்கள், ஒரு ஹோட்டல் மற்றும் ஒரு பள்ளி சேதமடைந்துள்ளன. சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். 2022 இல், பாகிஸ்தானில் பருவமழை வெள்ளத்தால் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கி 1,700 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.