இளைய தலைமுறையினர் பலர் சமயம் குறித்து அறிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் ஆர்வமாக இருக்கின்றனர். நமது வாழ்க்கையில் சமயம் இன்றியமையாத ஒன்று என்பதனை நம்மால் மறுக்க முடியாது. சமயம் குறித்து கற்று கொள்ள சொற்பொழிவு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் வரும் 25.7.2025 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணியளவில் 4ஆவது முறையாக தெலுக் இந்தான் வெள்ளை விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் சமய சொற்பொழிவு நடைபெறும் என்று ஆலயத்தலைவர் கிருஷ்ணன் மூர்த்தி தெரிவித்தார்.