ஜூலை 31 முதல் ஆறு மாத ஒத்திவைப்பு காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், நாடு முழுவதும் உள்ள முதலாளிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்று மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.
"ஆகஸ்ட் 1. 2025 முதல், விதிவிலக்கு இல்லாமல், ஒத்திவைப்பு காலத்தால் முன்னர் பயனடைந்தவர்கள் உட்பட, அனைத்து முதலாளிகளும் வெ. 1,700 மாதாந்திர குறைந்தபட்ச ஊதிய உத்தரவைக் கடைபிடிக்க வேண்டும். "இதில் குடியுரிமை பெறாத ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தப் பயிற்சியாளர்களும் அடங்குவர், ஆனால் வீட்டுப் பணியாளர்களுக்கு இது பொருந்தாது. என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எந்தவோர் ஊழியரும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விகிதத்திற்குக் கீழே அடிப்படைச் சம்பளத்தைப் பெறுவதை உறுதிசெய்ய, தங்கள் நிறுவனத்தின் ஊதிய அமைப்பை மறுபரிசீலனை செய்யுமாறும், உற்பத்தித்திறன் மேம்பாடு மற்றும் பணியாளர் திறன் பயிற்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் செயல்பாடுகளைப் படிப்படியாகச் சரிசெய்யுமாறும் அமைச்சகம் முதலாளிகளுக்கு நினைவூட்டியது.