நியூயார்க்: பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்கும் அதன் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பதற்கும், ஐ.நா.,வில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடி உள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த கூட்டத்தில் பேசுகையில் பாகிஸ்தான் பிரதிநிதி இந்தியாவைப் பற்றி குறை கூறி பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய நிரந்தர பிரதிநிதி தூதர் பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது: ஜனநாயகம், வளர்ந்து வரும் பொருளாதாரம், பன்முகத்தன்மை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொடர் கடன் வாங்கும் நாடும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடும் பாகிஸ்தான் தான். பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்காக, தனது பொருளாதாரத்தை தவறாக கையாள்கிறது. சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறைகளில் ஈடுபடும், அதே வேளையில், சபை உறுப்பினர் ஒருவர் சமய போதனைகளை வழங்குவது முறையற்றது.